Wednesday, September 29, 2010

ஆண்டாளடி

சிறுக‌தை

விழித்தவுடன் தகரத்தில் அலைந்து பரவிப்படிந்த புகைச்சித்திரத்தை சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்த பின்னரே தான் சமையல் கட்டில் படுத்திருப்பது முனிக்கு உரைத்தது. சட்டெனெ எழுந்து உட்கார்ந்தான். கைலி அவிழ்ந்திருந்தது. அதுவே இரவு போர்வையானது நியாபகம் வந்தது. பின்மண்டை கனத்து பின் வலித்தது. எழ மனமின்றி அப்படியெ அவிழ்ந்த கைலியுடன், தலையை பின் சரித்து, கைகளை பின்பக்கம் ஊன்றி உட்கார்ந்திருந்தான். வலப்புறம் சமையல் மேடையில் எதுவோ கொதித்தவண்ணம் இருந்தது. வெகு நேரம் உறங்கிவிட்டோம் என்ற எண்ணம் அவனுக்கு அயர்ச்சியை தந்தது.

Friday, September 24, 2010

ச‌த்சித் ஆன‌ந்த‌ம்

ந‌கைச்சுவை சிறுக‌தை‍

அந்த மே மாதத்தில், சென்னை சென்ட்ரலில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் வந்து நிற்க, மூன்றாம் வகுப்பு குளிர் சாத‌ன‌ப் பெட்டியிலிருந்த்து தன் எடையைவிட மூன்று மடங்கு அதிகமுள்ள் பெட்டியுடன் நடைமேடையில் புன்னகை தவழ இறங்கினார் ஸோவோ சந்நியாசியும், டெல்லியில் உயிரியல் ஆசிரியராக வேலை பார்க்கும் நாற்பது வயது நந்திகேசன் என்னும் தியானத்தாமரை (சந்நியாசப் பெயர்). வ‌ழுக்கை த‌லை. ப‌ரும‌னான‌ உட‌ல்.க‌ழுத்தில் ஸோவோ ப‌ட‌ம் போட்ட‌ க‌ட்டை மாலை. ஸோவோ ஆசிரமத்தில் அணியக்கூடிய, கழுத்து முதல் பாதம் வரை தொங்கும் மஞ்சள் நிற நீள அங்கி அணிந்திருந்தார். பள்ளி செல்லும் சமயங்களில் வேண்டாவெறுப்பாக அஞ்ஞானிகள் அணியும் பேண்டுசட்டை. இளித்த வாய் சுருங்கவில்லை. பெட்டிதூக்குபவன் கூட அவர் முன் நிற்கவில்லை. புன்னகை வழிந்தபடியே இருந்தது. அப்புன்னகை யாருக்காகவும் இல்லை. அது அவரது இயல்பு. எப்பொழுதும் தன்னில் நின்று சத்சித் ஆனந்ததில் மிதப்பவர்.

Monday, September 13, 2010

ஜனன மரணம்

நான் பிறந்த கணத்தில்
பிறந்ததிந்த உலகு
முலையில் பாலுடன் தொடங்கி
ஒவ்வொன்றும்
ஒவ்வொன்றாய்
சிருஷ்டிக்கப்பட்டது

புழுவும் பூண்டும்
பறவையும் பூச்சியும்
விலங்கும் மனிதனுமாய்
பிறந்தபடியிருந்தன

எனக்கான காலம்

யம்மா கால் கழுவிவிடு
என்று சட்டையை தூக்கிபிடித்தபடி
கத்திய நேரத்தில்
இறந்து போயிருந்தால்
என் அம்மா

பதினொன்னு பன்னென்டு படிக்கிறேன்
என்று விசும்பிய நேரத்தில்
பாலிடெக்கினிக்கில் பணம் கட்டியிருந்தார்
என் அப்பா

Wednesday, September 8, 2010

ரகசியம்

சிறகின் மடிப்புகளில்
பொதிந்து கிடக்கிறது
பறப்பதற்கான ரகசியம்

யாருமற்ற
பரந்த வானில்
சிறகு விரித்து
ரகசியங்களை படித்தபடி அலைகிறது
பறவை