Wednesday, October 20, 2010

ம‌ர‌ண‌ம்

திடுதிப்பென்று
விப‌த்தில் மொத்த‌மாய்
செத்த‌வ‌ரில் ஒருவ‌னாக‌வோ

விரோதியின்
க‌த்தியால் க‌ண்ணிமைக்கும்
நேர‌த்தில் க‌ழுத்த‌றுப‌ட்டோ
ஊசியேற்றி ம‌ருந்திட்டு
பாக‌ங்க‌ளை பிள‌ந்தும்
ப‌ய‌னில்லாம‌ல்
நோயின் ச‌தியால்
சாக‌டிக்க‌ப்ப‌ட்டோ

க‌டித்துக் குத‌றி
என் க‌றியின் ருசி பார்க்கும்
மிருக‌த்தின் கூரிய‌ ப‌ற்க‌ளுக்கிடையே
ம‌ர‌ண‌மேற்ப‌ட்டோ

ஆய்ந்து ஓய்ந்து
அல‌ர்ந்து த‌ள‌ர்ந்து
க‌ண்ணின்றி காதுகுன்றி
க‌ட்டிலில் என் க‌ழிவுக‌ளுட‌னேயே
நான‌றியாது நானிற‌க்க‌வோ

விரும்ப‌வில்லை அத்த‌கைய‌தோர் ம‌ர‌ண‌ம்

அம‌ர்ந்திருந்த்து
ஆழ்ந்துண‌ர்ந்து
க‌ழ‌ன்று பின் க‌ரைவ‌தாய்
வேண்டுமென‌க்கு..

3 comments:

  1. எல்லோரும் வேண்டும் மரணம் இப்படியாகத்தான்..
    அனால் வாழ்க்கைபாட்டில் வரையின்றி மாறிப் போய்விடுகிறது...

    ReplyDelete
  2. Engey irunthaan intha kavizngan... ithanai naalaaga..

    Kallura machi... this comments applies to all work you have done so far...

    ReplyDelete
  3. kamal_srini@yahoo.co.inNovember 2, 2010 at 5:16 AM

    nalla irukunga

    ReplyDelete